Study

அலகு 2. எண்கள்

  •   0%
  •  0     0     0

  • ஒரு காட்டில் வாழும் விலங்குகளின் இந்த வருட கணக்கெடுப்பின் படி எண்ணிக்கை 37000. சென்ற வருட கணக்கெடுப்பின் படி எண்ணிக்கை 23000 எனில் இந்த வருடம் அதிகரித்த விலங்குகளின் எண்ணிக்கை எவ்வளவு?
    ”14000”
  • ஒரு பெரிய அடுக்கு மாடி குடியிருப்பில் 900 வாகனங்களை மக்கள் பயன்படுத்துகிறார்கள். அதில் இரண்டு சக்கர வாகனங்கள் 450 எனில் நான்கு சக்கர வாகனங்கள் எத்தனை?
    ”450”
  • ஒரு கேக் செய்யும் நிறுவனத்திற்கு கேக் செய்ய ஒரு நாளைக்கு 30000 முட்டைகள் தேவைப்படுகின்றன. 15000 முட்டைகள் நிறுவனத்திற்கு வந்துவிட்டன எனில் இன்னும் தேவைப்படும் முட்டைகள் எத்தனை?
    ”15000”
  • ஒரு கைவினைப்பொருள் செய்யும் இடத்தில் ஒரு நாளைக்கு 5000 கிண்ணங்களை உற்பத்தி செய்வார்கள். காலை வேளையில் 2700 கிண்ணங்களை உற்பத்தி செய்துவிட்டனர் எனில் மாலைவேளையில் இன்னும் எத்தனை கிண்ணங்களை அவர்கள் உற்பத்தி செய்ய வேண்டும்?
    ”2300”
  • ஒரு புயல் காற்றினால் 20000 மரங்கள் இருந்த தென்னந்தோப்பில் 2000 மரங்கள் உடைந்துவிட்டன. எனில் மீதமுள்ள தென்னை மரங்கள் எத்தனை?
    ”18000”
  • ஒரு பல்கலைக்கழகத்தில் 20000 மாணவர்கள் படிக்கிறார்கள். அதில் கல்வியில் சிறந்து விளங்குபவர் 13000 பேர், மீதி பேர் அனைவரும் விளையாட்டில் சிறந்து விளங்குகிறார்கள். விளையாட்டில் சிறந்து விளங்குபவர்கள் எத்தனை பேர்?
    ” 17000”
  • ஒரு பெருநகரத்தில் 8000 கார்களை மக்கள் பயன்படுத்துகிறார்கள். அதில் 5500 கார்கள் டீசலை எரிபொருளாகப் பயன்படுத்துகிறார்கள். மீதமுள்ளவர்கள் பெட்ரோலை எரிபொருளாக பயன்படுத்துகிறார்கள். எனில் பெட்ரோலை பயன்படுத்தும் மக்கள் எத்தனை பேர்?
    ”2500”
  • சேலத்தில் இருந்து பிற மாவட்டங்களுக்கு லாரியிலும், ஆட்டோவிலும் அனுப்பப்படும் மாம்பழங்களின் எண்ணிக்கை 200000. இதில் 18000 மாம்பழங்கள் ஆட்டோவில் அனுப்பப்பட்டுவிட்டன. எனில் லாரியில் அனுப்ப வேண்டிய மாம்பழங்கள் எத்தனை?
    ”182000”
  • ஒரு உணவு விடுதியில் ஒரு நாள் வரவு 157000 ரூபாய். அதில் 50000 ரூபாய் காலை நேர வரவு எனில் மாலை நேர வரவு எவ்வளவு?
    ”107000 ரூபாய்”
  • ஒரு பள்ளியில் பயிலும் குழந்தைகளின் எண்ணிக்கை 14000. அதில் 8000 பேர் ஆண்கள் எனில் பெண்கள் எத்தனை பேர்?
    6000