Study

அலகு 1. வடிவியல்

  •   0%
  •  0     0     0

  • கோள வடிவத்திற்கு சமதளம் உண்டா?
    ”இல்லை”
  • மேற்பரப்பு என்ற அளவு மட்டுமே கொண்ட முப்பரிமாண வடிவம் எது?
    ”கோளம்”
  • எந்த முப்பரிமாண வடிவத்தின் அனைத்துப் பக்கங்களும் சமம்?
    ”கனச்சதுரம்”
  • கனச்சதுரத்திற்கு எத்தனை முகங்கள் உண்டு?
    ”6”
  • உயரமும் சாயுயரமும் கொண்ட முப்பரிமாண வடிவம் எது?
    ”கூம்பு”
  • கனச்செவ்வகத்தில் எத்தனை முனைகள் உள்ளன?
    ”8”
  • உயரம் என்ற அளவு இல்லாத வடிவங்கள் எத்தகைய வடிவங்கள்?
    ”இரு பரிமாண வடிவங்கள்”
  • கூம்பின் அடிப்பகுதி என்ன வடிவம் ?
    ”வட்ட வடிவம்”
  • கனச்சதுரத்திற்கு எத்தனை முனைகள் உள்ளன?
    ”8”
  • உருளை வடிவத்தில் எத்தனை சமதளங்கள் உள்ளன?
    ”2”
  • கூம்பின் உச்சிக்கும் அடிப்பக்கத்தின் சுற்றளவில் உள்ள ஏதேனும் ஒரு புள்ளிக்கும் இடைப்பட்ட தொலைவு என்பது என்ன?
    ”சாயுயரம்”
  • கனச்சதுரத்திற்கும் கனச்செவ்வகத்திற்கும் எத்தனை முகங்கள் உள்ளன?
    ”6”
  • கூம்பின் மேல் முனையிலிருந்து அடிப்பாகத்தின் நடுப்புள்ளி வரை உள்ள தொலைவு சாயுயரம் ஆகும்.
    ”இல்லை. அது உயரம் ஆகும்”
  • உருளையில் இரண்டு சமத்தளங்களுக்கு இடையே உள்ள தொலைவு என்பது என்ன?
    ”உயரம்”
  • கோளத்தின் மேற்பரப்பில் உள்ள அனைத்து புள்ளிகளும் எந்தப் புள்ளியில் இருந்து ஒரே தொலைவில் இருக்கும்?
    ”மையப்பள்ளி”
  • கனச்சதுரத்திற்கு சாயுயரம் உண்டா?
    ”இல்லை”
  • கனச்செவ்வகத்தின் எந்த பக்கங்கள் சமம்?
    “எதிரெதிர் பக்கங்கள் சமம்”
  • கனச்செவ்வகத்திற்கு எத்தனை முகங்கள் உண்டு?
    ”6”
  • கோளத்திற்கு முனைப்புள்ளிகள் உண்டா?
    ”இல்லை”
  • கனச்சதுரத்திற்கு எத்தனை விளிம்புகள் உள்ளன?
    ” 12 விளிம்புகள் ”
  • எதிரெதிர் பக்கங்களை சமமாகவும் 12 விளிம்புகளையும் கொண்ட வடிவம் எது?
    ”கனச்செவ்வகம்”