Edit Game
5ம்வகுப்பு,தமிழ்,2 � ...
 Delete

Use commas to add multiple tags

 Private  Unlisted  Public




Delimiter between question and answer:

Tips:

  • No column headers.
  • Each line maps to a question.
  • If the delimiter is used in a question, the question should be surrounded by double quotes: "My, question","My, answer"
  • The first answer in the multiple choice question must be the correct answer.






 Save   20  Close
பண்டைய காலம் முதல் இன்று வரை வழக்கில் இருந்து வரும் விளையாட்டுகள் யாவை?
வழுக்கு மரம், நீர் விளையாட்டு, கபடி என்கிற சடுகுடு.
இருவர் கைகோர்த்து கால்களாலும் தலையாலும் இடித்தும் உதைத்தும் ஒருவருடன் ஒருவர் போர் செய்வதே ----------------------
மற்போர்
மல் என்பது ____________ குறிக்கும்.
வலிமையைக்
மற்போரில் வெற்றி பெற்றவர்களை[----------------- என்னும் சொல்லால் குறிக்கும் வழக்கம் இருந்தது
மல்லன்
படைக்கலன்கள் ஏதுமின்றி இருவர் போரிடும் விளையாட்டு --------------
மற்போர்.
படைத்திறமும் கொடைத்திறமும் கொண்டு விளங்கிய கடையெழு வள்ளல்களில் ஒருவரானவர் யார்?
வல்வில் ஓரி
வித்தை என்பது யாது?
வியப்படையச் செய்யும் வகையில் நிகழ்த்தப்படும் ஒரு செயல்
தமிழரின் வீரத்திற்கும் நுட்பமான செயல் திறனுக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் விளையாட்டு எது?
சிலம்பாட்டம்
.கடையேழு வள்ளல்கள் ஒருவரான--------------------வில்லாற்றலில் சிறந்து விளங்கியவர்
“வல்வில் ஓரி”
சிலம்ப கலையில் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் என்னென்ன?
மான் கொம்பு ,பிச்சுவா கத்தி சுருள்பட்டா, வளரி.
சிலம்பத்திற்கான கம்பு நன்கு வளைந்து கொடுக்கக்கூடிய ----------------என்னும் மூங்கில் இனத்திலிருந்து செய்யப்படுகிறது.
‘சிறு வாரைக்கம்பு '
கோடிட்ட இடத்தை நிரப்புக.......சிலம்பாட்டத்திற்கு __________என்னும் பெயரும் உண்டு.
கம்பு சுழற்றுதல்
சிலம்பு என்றால்-------------- என்பது பொருள்
ஒலித்தல்
ஏறு தழுவுதல் விளையாட்டுக்கு வழங்கப்பெறும் மற்றொரு பெயர்கள் எவை? ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு.
ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு.
.___________ திருவிழாவின்போது ஏறுதழுவுதல் விளையாட்டு நடைபெறுகிறது
பொங்கல்
ஏறு தழுவுவதற்கு உகந்த நிலம் எந்த நிலம்?
முல்லை நிலம்
ஏறு தழுவுதல் என்றால் என்ன?
ஏறு தழுவுதல் என்பது காளையை தழுவி அதன் வீரத்தை அடக்குவதாகும்.
தமிழரின் வீரத்தை பறை சாற்றும் விளையாட்டுகளுள் ஒன்று-------------------
ஏறு தழுவுதல்
தமிழர்களின் வீர விளையாட்டுக்கள் எவை?
ஏறு தழுவுதல் ,சிலம்பாட்டம், இளவட்டக்கல் தூக்குதல், மற்போர்
பண்டைய தமிழன் -------------------பகைவரை வென்றான். தாளாண்மையால் நன்னிலம் ஆக்கினான் வேளாண்மையால் வளம் பெருக்கினான்.
வாளாண்மையால்